Home » Uncategorized » Free house contruction for trials at Nagarrootru
  • Free house contruction for trials at Nagarrootru

    கோவை மாவட்டம்  ஆனைமலை தாலுகாவுக்கு  உட்பட்ட களப்பகுதியில்  பழங்குடியின  நலம்— நலத்திட்டங்கள் பழங்குடியின  மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பழங்குடியின மக்களுக்கு  வீடுகள் கட்டுதல்  நிதி ஒப்பளிப்பு  ஆணைகள்  வெளியிடப்பட்டது. மலைப்பகுதியில்  ஒதுக்கீடு  செய்யப்பட்ட 100  வீடுகளுக்கான பயனாளிகளின் பட்டியல்  தேர்வு  செய்து  01-02-2024  பணி ஆணை  வழங்கப்பட்டது.

    அதில்  கோழிகமுத்தி, எருமைப்பாறை, கூமாட்டி ,நாகரூற்று – 1 நாகரூற்று – 2 வீடுகள்  ஒதுக்கப்பட்டு முதல் முறையாக நாகரூற்று – 2 இல்  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்களின் செயல்முறை  மற்றும்  வனத்துறை உயர் அதிகாரி உதவியுடன்  வாகை சேவை அறக்கட்டளை  மூலம் வீடுகள் கட்ட பழங்குடியின மக்கள்  ஒத்துழைப்புடனும் சார் ஆட்சியர் ,பரிந்துரையின் படியும்  மாவட்ட  ஆதிதிராவிடர் பழங்குடியினர் நலத்துறை வழிகாட்டுதலின் படி வீடுகள் கட்டி முடித்து  நாளது தேதி     06-12-2025 அன்று

    மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையின் கீழ் நாகர்ரூற்று – 2 பயன்பெற போகும்  பயனாளிகள்  ஊர்தலைவர் சி.நாகப்பன் அவர்கள்திறவுகோள்  பெற்றுக்கொண்டார் 40 வருட காலமாக எந்தவித இருப்பிடம்  இல்லாமல்  வாழ்ந்து வந்தோம்.  வாகை சேவை அறக்கட்டளை மூலம்  திரு.N.முரளிதரன் N.டெண்டில் விக்னேஷ்   கட்டிட பொறியாளர் மூலம்  வீடுகள் கட்டி முடித்து  தந்தவுடன்  வாகை சேவை அறக்கட்டளை நிறுவனர் மு.ரவிச்சந்திரன் அவர்களுக்கும்  பழங்குடியின மக்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் மூலமாக பழங்குடியின மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை பெற்றுத்தந்தார்.

    மேலும் நாகரூற்று – 1,2 பழங்குடியின மக்களுக்கு  பொது நலனில்  அக்கறை கொண்டு  எங்களுக்காக உதவிக்கரம் நீட்டும்  வாகை சேவை அறக்கட்டளை நிறுவனர் மு.ரவிச்சந்திரன் அவர்களுக்கு  பழங்குடியின மக்கள் சார்பாக  நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறோம்